வெள்ளை மாளிகையின் தீவிர பாதுகாப்பு அறையில் அவசரமாக கூடும் US - NSC
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையை கூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் அடித்தளத்தில் உள்ள உயர் பாதுகாப்பு அடங்கிய அவசரநிலை அறையில் (The situation room) அதிகாரிகள் தயார்நிலையில் இருக்குமாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான போர் காரணமாக அவர் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதிகரிக்கும் போர்பதற்றம்
இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையை வெள்ளை மாளிகையின் தீவிர பாதுகாப்பு அடங்கிய அறைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கனடாவில் இருந்து தான் அமெரிக்காவுக்கு வந்தவுடனேயே அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையில் வெளியுறவுத்துறை செயலாளர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அரச அதிகாரிகள் அடங்குவர்.
ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம் குறித்த ஒரு பிரதிபலிப்பாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam