ஈரானிய உயர் தலைவர் : சரணடையுமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது அமெரிக்காவிற்குத் தெரியும், ஆனால் அவர் இப்போதைக்கு கொல்லப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாள் மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலை, ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
பொறுமை குறைந்து வருகிறது
உயர் தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும், அவர் ஒரு எளிதான இலக்கு. அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.இப்போதைக்கு அவரை கொல்லப்போவதில்லை.
எனினும் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை தாம் விரும்பவில்லை.
அத்துடன் தமது பொறுமை குறைந்து வருகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தெஹ்ரானின் 9.5 மில்லியன் குடியிருப்பாளர்கள், அங்கிருந்து வெளியேறுமாறு, ட்ரம்ப் வலியுறுத்திய பின்னர், இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கமெனி பற்றிய கருத்துகளும் சரணடைய அழைப்புகளும், ட்ரம்ப் தெஹ்ரான் வான்வெளியை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக, கூறிய சிறிது நேரத்திலேயே வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
