சதாம் ஹுசைனின் விதியே காமெனிக்கும்! எச்சரித்த இஸ்ரேலிய படை
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனிக்கு, இராக் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளரான சதாம் ஹுசைனின் நிலையே எற்படும் என IDF இன் உயர்மட்ட அதிகாரிகளுகள் குழு எச்சரித்துள்ளது.
IDF இன் உயர்மட்ட அதிகாரிகள் இன்று காலை கூடி நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனிக்கு "சதாம் உசேன் போன்ற ஒரு விதி" உள்ளது என IDF இன் தலைவர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
போர்க்குற்ற தாக்குதல்
இஸ்ரேலிய பொதுமக்கள் மீது தொடர்ந்து போர்க்குற்றங்களைச் செய்வதற்கும் ஏவுகணைகளை வீசுவதற்கும் எதிராக ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன் என்றும் காட்ஸ் கூறியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் ஒரு பாலைவன குழியில் மறைந்திருந்த ஈராக்கிய வலிமைமிக்க ஹுசைனை கமேனி நினைவில்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.
ஈரானின் அரசு ஒளிபரப்பாளரான IRIB இன் தெஹ்ரான் தலைமையகம் மீது ஒரு நாள் முன்னதாக இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டதாக காட்ஸ் இதன்போது கூறியுள்ளார்.
தெஹ்ரானில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக, ஐ.டி.எஃப் செய்தித் தொடர்பாளரின் அறிவுறுத்தல்களின்படி அந்தப் பகுதிகளை காலி செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் காட்ஸ் மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan