நீதிமன்றத்தில் சரணடைய சிந்திக்கும் டிரம்ப்!
அமெரிக்க நடிகைக்கு தேர்தல் நிதியினை வழங்கிய குற்றச்சாட்டில் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிமன்றில் சரணடைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் 2016 ஆம் ஆண்டு ஆபாசப் பட நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தபோது தேர்தல் பிரசாரத்திற்காக வசூலிக்கப்பட்ட நிதியினை நடிகைக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனை குறித்த நடிகை புத்தகமொன்றில் குறிப்பிட்டு அம்பலப்படுத்தியமை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கைது செய்யப்பட வாய்ப்பு
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க மன்ஹாட்டன் டவுன்ட்டவுன் நீதிமன்றத்தில் அவர் சரணயடைய முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கையில் டிரம்ப் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்





ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
