அமெரிக்க குடியுரிமை தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) முக்கிய கொள்கைகளில், அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தன்னிச்சையாக குடியுரிமை கிடைக்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
அமெரிக்காவில் சட்ட அனுமதியுடன் நுழைந்து..
இந்த முடிவுக்கான நிர்வாக உத்தரவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் முதல் நாளிலேயே கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்து, அக்குழந்தைக்கு குடியுரிமை வழங்குவதாக இருந்தால், ஒன்று அந்தக் குழந்தையின் பெற்றோரின் யாரேனும் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது ஒருவர் அமெரிக்காவில் சட்ட அனுமதியுடன் நுழைந்து, நிரந்தரமாகத் தங்கியிருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
அமெரிக்க குடியுரிமை கோரி விண்ணப்பம்
ஆனாலும், புதிய ஜனாதிபதியாக வர இருக்கும் டொனால்ட் டிரம்ப் கொண்டு வரவுள்ள இந்த விதிமுறை, அமெரிக்காவின் 14வது சட்டத்திருத்தத்துக்கு எதிரானதாக இருக்கும்.

ஏற்கனவே இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை மீறும் வகையில், இந்த அறிவிப்பு இருக்கும் என்று அந்நாட்டு சட்ட நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தினால், அமெரிக்க குடியுரிமை கோரி விண்ணப்பித்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam