அமெரிக்க தடையால் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா (US) தடைகளை விதித்துள்ளமையானது, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலகு வழியை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏர்பஸ், மிக் விமான ஒப்பந்தங்கள் தொடர்பில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இத்தடை விதிப்பானது அரசாங்கத்திற்கு, குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலகு வழியை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தங்கள்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில், கருத்துரைத்த அவர், மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும் மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கு இந்தத் தீர்ப்பு ஊக்கமளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

எனினும், இலங்கை எல்லைக்கு அப்பால் சர்வதேச மட்டத்தில் சில ஒப்பந்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறான மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அந்தந்த நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி உரிய கால அவகாசம் எடுத்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri