அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை: அலி காமினிக்கு ட்ரம்ப் கடிதம்
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் உச்ச தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடுக்கும் ஒரு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் அயதுல்லா அலி கமேனிக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை
“நான் ஒரு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். எல்லோரும் என்னுடன் உடன்படுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் நீங்கள் இராணுவ ரீதியாக வெற்றிபெற சமமான ஒரு ஒப்பந்தத்தை நாம் செய்ய முடியும்,” என்று ட்ரம்ப் கடிதத்தில் கூறியுள்ளார்.
இதன்படி ட்ரம்ப்பின் கருத்துக்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஈரான் அரசின் அனைத்து விடயங்களிலும் இறுதி முடிவைக் மேற்கொள்ளும், கமேனியின் அலுவலகத்திலிருந்து பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என தென்கொரியா பதற்றம் News Lankasri

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam
