அல்ஜசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகிய பெராரி ஓட்டுநர்!
பெராரி கார் ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் கூறிய விடயமானது அனைவரையும் சிரிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, கவலையான செய்தி ஒன்றை தெரிவிப்பதாக நாடாளுமன்றில் கூறியபோதே இவ்வாறு சிரித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்ற ஆரம்பித்தபோதே, மிகவும் கவலையான செய்தியுடனேயே விவாதத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கவலையான செய்தி
இதன்போது, சபையில் இருந்த சகல எம்.பிக்களும் ஏதோவொரு கவலையான செய்தியொன்றையே அவர் கூறப் போகின்றார் என்று அதிர்ச்சியுடன் அவர் கூறுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பிமல் ரத்நாயக்க, “அண்மையில் இடம்பெற்ற பெரிய வாகன விபத்தொன்று தொடர்பில் இங்கே அறிவிக்க வேண்டியுள்ளது.
பெராரி கார் ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவர் இந்த தினங்களில் பல்வேறு கதைகளை கூறுகின்றார்.
நிதி ஒதுக்கீட்டு விவாதம்
இதனையடுத்து போக்குவரத்து அமைச்சு மீதான விவாதம் நடக்கும் இந்த நேரத்தில் பெராரி வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவருக்கு எங்களின் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்” என சாடியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சர்வதேச ஊடகமொன்றின் நேர்கானலில், நீங்கள் மீண்டும் நாடாளுமன்றம் செல்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது ''பெராரி உரிமம் உள்ள ஒருவர், ‘எல்’ போட் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த கூற்றை மையப்படுத்தியே பிமல் ரத்நாயக்க இன்றைய நாடாளுமன்ற அமர்வில் “ கவலையான செய்தி” என குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |