முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர விரைவில் கைது செய்யப்படும் சாத்தியம்! வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர விரைவில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
கிரிபத்கொடை பிரதேசத்தில் அரச காணியொன்றை போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடியான முறையில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம்
இந்தக் குற்றச்சாட்டின் கீழ் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட ஏழு பேர் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர, களனிய பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், சட்டத்தரணி ஒருவர் ஆகியோரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தற்போது தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
மிக விரைவில் மேற்குறித்த தரப்பினர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறியக் கிடைத்துள்ளது.