டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ராஜாங்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இதனை கூறியுள்ளார்.
இலங்கை நேற்று நாட்டின் 77 ஆம் ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடிய நிலையில் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா சார்பாக, இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.
77 ஆண்டு சுதந்திரம்
இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து 77 ஆண்டுகளில், இரண்டு நாடுகளும், பரஸ்பர நன்மையை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கும் அதன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா எதிர்ப்பார்க்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam