ரஷ்ய - அமெரிக்க போர் பதற்றம்! ட்ரம்ப் உத்தரவால் எழுந்துள்ள அச்சம்
ரஷ்யாவிற்கு அருகே 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ட்ரம்ப் எடுத்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர்
3 வருடங்களாக நீடித்து வரும் உக்ரைன் - ரஷ்யா போரை ட்ரம்ப் முயற்சித்தும் அவரால் முடியவில்லை.
அதனை தொடர்ந்து ட்ரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாக குறைத்துள்ளார்.
ஓகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவும், ரஷ்யாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.
அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல்
இதனிடையே, ட்ரம்பின் கருத்துக்கு ரஷிய முன்னாள் அதிபரும், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல. ஒவ்வொரு காலக்கெடுவும் மிரட்டல், போருக்கான பாதை. இந்தியா, ரஷ்யாவின் இறந்த பொருளாதாரங்கள் குறித்த ட்ரம்ப்பின் பேச்சால் அவர் ஆபத்தான எல்லைக்குள் நுழைகிறார். அவர் இல்லாத இறந்த கைகள் (dead hand) எவ்வளவு ஆபத்தானது பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.
இறந்த கைகள் (dead hand) என்பது ரஷ்யா - அமெரிக்கா பனிப்போரின்போது ரஷ்யாவால் அமைக்கப்பட்ட அணு ஆயுத தாக்குதல் கட்டமைப்பாகும். இந்த கட்டமைப்பு, ரஷ்யா மீது அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் தலைவர்கள் உயிரிழந்தபோதும், அணு ஆயுத கட்டளைகளை அளிக்காதபோதும், தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பனிப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அணு ஆயுத கட்டமைப்பு தற்போதும் செயல்பாட்டில் உள்ளது" என்று தெரிவித்தார்.
ஆத்திரமூட்டும் மிரட்டல்கள்
இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியின் டிமிட்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வதேவின் முட்டாள்தனமான, ஆத்திரமூட்டும் மிரட்டல்களுக்கு பதிலடியாக அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்.
வார்த்தைகள் மிகவும் முக்கியம். அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். டிமிட்ரியின் தற்போதைய வார்த்தைகள் அதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்ததாது என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் மிரட்டல்
இதனை அடுத்து ட்ரம்பின் மிரட்டலுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ரஷ்ய எம்.பி. விக்டர் வடலொட்ஸ்கெ,
"அணு ஆயுதம் தாங்கிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை விட அணு ஆயுதம் தாங்கிய ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் அதிகம். ட்ரம்ப் உத்தரவிட்ட அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களும் எங்கு உள்ளன.
அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு தெரியும். எனவே, ட்ரம்ப்பின் கருத்துக்கு ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தி பதிலடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.




