வெற்றியை எதிர்பார்க்கும் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள்
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இரண்டு அணிகளில் ஒரு அணிக்கு வெற்றி என்ற நிலையில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று(3) இடம்பெறுகிறது.
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தநிலையில் வெற்றிக்காக 374 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாடும், இங்கிலாந்து அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் நேற்றைய மூன்றாம் நாள் நிறைவின்போது, ஒரு விக்கட் இழப்புக்கு 50 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களை பெற்றது.இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 247 ஓட்டங்களையும் பெற்றது.
இதனையடுத்து துடுப்பாடிய இந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களை பெற்றுள்ளது.




