போராடிய இந்திய வீரர்கள்: டிராவில் முடிந்த 4ஆவது டெஸ்ட்
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி டிரோவில் முடிந்துள்ளது.
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மொன்செஸ்டரில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகியது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ்-இந்தியா
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி சார்பில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ஓட்டங்களிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பண்ட் 54 ஓட்டங்களிலும் கே.எல்.ராகுல் 46 ஓட்டங்களிலும் ஷர்துல் தாகூர் 41ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸ்- இங்கிலாந்து
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
ஜோ ரூட் 150 ஓட்டங்களிலும் பென் ஸ்டோக்ஸ் 141 ஓட்டங்களிலும் பென் டக்கெட் 94 ஓட்டங்களிலும் ஜேக் கிராலே 84ஓட்டங்களிலும் ஒல்லி போப் 71ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வொஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸ்
இதையடுத்து, 311 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.
கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றினார்.
அடுத்து இணைந்த கே.எல்.ராகுலும், சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174ஓட்டங்களை எடுத்தது.
3வது விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் சதமடித்து 103 ஓட்டங்களில் வெளியேறினார்.
இங்கிலாந்து முன்னிலை
5வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் ஜடேஜா இணைந்ததுடன் விக்கெட்டுக்களையும் விழாமல் பார்த்துக் கொண்டனர். இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 425 ஓட்டங்கள் குவித்தது.
ஜடேஜா 107 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 101 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
