தென் அதிவேக வீதியில் கோர விபத்து: இரண்டு பெண்கள் பலி
தென் அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(26) பிற்பகல் நடந்த வாகன விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தளயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வானின் டயர், அங்குணகொலபெலஸ்ஸ பகுதியின்; 175வது கிலோமீட்டர் தூண் பகுதியில் வைத்து வெடித்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
பெண்கள் பலி
இதனையடுத்து வாகனம் கவிழ்ந்து விபத்துள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த சிற்றூர்தியில் ஆறு பேர் இருந்ததுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இதுபோன்ற துயரங்களைத் தடுக்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறும், வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam