இனியபாரதியின் வீட்டில் பதுங்கு குழியா! கொழும்பிலிருந்து பறந்த CID யின் அதிநவீன ஜீப்
கிழக்கு மாகாணத்தில் நடந்த பல சம்பவங்கள் தொடர்பில் இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமாரை கடந்த 6ஆம் திகதி சிஜடியினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கருணா - பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனியபாரதியின் விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு கொண்டிருக்கின்றன.
கடந்த 2005 மற்றும் 2008க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக நீண்ட விசாரணை நடத்திய பின்னர், திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து வந்த குற்றத்தடுப்பு பிரிவினுடைய சிரேஸ்ட அதிகாரிகள் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மற்றும் முகாம்களில் பல தேடுதல்களை நடாத்தி இருந்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு முக்கிய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.இதனைக் கருத்திற்கொண்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அத்தோடு, இந்த தேடுதல்களின் பின்னர் பல விடயங்கள் மறைமுகமாக அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 5 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
