கணவனை கொலை செய்துவிட்டு சினிமா பாணியில் நாடகமாடிய மனைவி
கம்பஹா, கனேமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
60 வயதுடைய தொழிலதிபர் சுசந்தா தம்மிகா என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் தனது தந்தை மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தொழிலதிபரின் மகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
எனினும், தொழிலதிபரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து வெலிசறை நீதவானின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தற்கொலை அல்லது விபத்து என்பது உறுதி செய்யப்பட்டது.
கடும் வாக்குவாதம்
அதற்கமைய, ராகம குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், சம்பவத்தன்று இரவு தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.

முரண்பாட்டின் போது, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரைத் தாக்கியுள்ளார். பின்னர், தான் அணிந்திருந்த புடவையால் கணவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இக்கொலையை விபத்து என திசை திருப்புவதற்காக, உயிரிழந்த கணவரின் உடலை வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு நாடகமாடியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தீவிர விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட 53 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam