தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட பாரிய பாதிப்பு:சம்பிக்க ரணவக்கவின் பகிரங்கம்
நிலக்கரி கொள்வனவில் மின்சார சபைக்கு சுமார் ரூ.1,400 மில்லியன் அல்லது ரூ.140 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
நிலக்கரி பிரச்சினை குறித்து கொழும்பில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலே பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார்.தொடர்ந்து பேசிய அவர்,
எரிபொருள் டெண்டரில் ரூ.800 மில்லியன் நட்டத்திற்காக அர்ஜுன மற்றும் தம்மிக்க ரணதுங்க சகோதரர்கள் மீது வழக்குத் தொடர்ந்த இலஞ்சம்- ஊழல் ஆணைக்குழு, ஒரே ஒரு கப்பலில் இருந்து இவ்வளவு பாரிய இழப்பை ஏற்படுத்திய எரிசக்தி அமைச்சருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இந்த பாரிய இழப்பை ஈடு செய்வதற்காக அரசாங்கம் குறித்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க தயாராகி வருவதாகவும் கூறினார்.
சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு காரணமாக, இலங்கைக்கு தினமும் சுமார் 2 ஜிகாவோட்-மணிநேர (GWh) மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பானது தரமற்ற நிலக்கரி விநியோகஸ்தரிடமிருந்து அதிகாரிகள் வசூலிக்க எதிர்பார்க்கும் அபராதத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.