நாமலின் பயணப் பொதியை தூக்கிச் சென்ற சஜித்துக்கு நெருக்கமானவர்!
இந்திய குடியரசு தின நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக ஒடிசா சென்ற நாமல் ராஜபக்சவின் பயணப் பொதியை தூக்கிச் சென்ற சஜித் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைராகியுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, நாமல் ராஜபக்சவின் பயணப் பொதியை இந்திய விமான நிலையத்தில் எடுத்து வரும் காட்சிகளை கொண்டு பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன.
இந்தியாவில் நடந்த சம்பவம்
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த்ராணி கிரியெல்லவும் நாமல் ராஜபக்சவின் தலைமையில் பங்கேற்றிருந்தார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில், நாமல் ராஜபக்சவுடன் ஒரு குழு சென்றாத மொட்டு கட்சியால் ஒரு போலி செய்தியும் பரப்பப்பட்டது.

இதற்கான அழைப்பு, ஒடிசாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் உரிமையாளரால் விடுக்கப்பட்டிருந்தது.குறித்த தொழிலதிபரின் வர்த்தகங்கள் மூடுவிழாவை காணும் தருவாயில் நாமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam