தொடரை சமப்படுத்தும் நோக்குடன் போராடும் இந்தியா அணி! இங்கிலாந்து முன்னிலை
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான கிரிக்கட் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் இன்று இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவின்போது, இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 6 விக்கட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றிருந்தது.
கிரிக்கட் டெஸ்ட்
இதில் கருன் நாயர் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றிருந்தார். வோசிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்தனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதன்படி இறுதிப்போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.



