ஈரான் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திட்டம்
ஈரான் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானுடனான அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்துவதற்கு பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
எச்சரிக்கை...
முக்கியஸ்தர்களுடனான கூட்டம் ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம்(19) ஆம் திகதி அன்று, ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லையெனில் மிகத் தீமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை எச்சரித்திருந்தார்.
மேலும், எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் தீய விளைவுகள் ஏற்படும் என்று ட்ரம்ப் ஈரானை எச்சரித்ததோடு, 10 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam