ஈரான் பேச விரும்பினால் தொலைபேசியில் அழைக்கலாம் - போர் நிறுத்த கோரிக்கை நிராகரித்த ட்ரம்ப்
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க பிரதிநிதிகள், பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.
அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த செவ்வியில்; டொனால்ட் ட்ரம்ப் இதனை உறுதிச்செய்துள்ளார்.
அமெரிக்க அரசு எதிர்பார்க்கும் முடிவுகள்
சுமார் 18 மணிநேரம் வானூர்தியில் பயணம் செய்து பாகிஸ்தான் செல்வதால் அமெரிக்க அரசு எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்கப்போவதில்லை. தங்களிடம் அனைத்துச் சாதகமான அம்சங்களும் உள்ளன. அவர்கள் பேச விரும்பினால் எங்களைத் தொலைபேசியில் அழைக்கலாம்" என அவர் கூறியுள்ளார்.

ஈரான் தனது அணு ஆயுதக் கனவுகளைக் கைவிட வேண்டும் என்றும், இஸ்ரேல் போன்ற நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் "பயங்கரவாதச் செயல்பாடுகளை" நிறுத்த வேண்டும் என்றும் வோஷிங்டன் வலியுறுத்தி வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 28 அன்று வெடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் ஒரு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராகி வந்தது.
இதற்கு முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தை எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்திருந்தது.