இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கனடா கண்டனம்
இஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதலான மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் ஏற்படக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதில் தாக்குதல் நடத்தும் உரிமை
இந்த தாக்குதல்களின் மூலம் ஈரானிய அரசாங்கம் பிராந்திய வலயத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் உதாசீனம் செய்வது புலனாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தும் உரிமையை கனடா ஆதரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலின் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜோலி, எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் போன்றவர்களும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
கனடிய அரசாங்கத்தின் இந்த கண்டனங்களுக்கு நன்றி பாராட்டுவதாக கனடாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் இடோ மொஹட் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |