திருகோணமலை - மூதூர் பேருந்து சேவை கிண்ணியா ஆலங்கேணி ஊடாக செல்ல அனுமதி
திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடையிலான பேருந்து சேவையினை புஹாரி சந்தி ஆலங்கேணி ஊடாக இடம்பெறச் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கடந்த (02.04.2026) இடம்பெற்ற கூட்டத்தில், கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம் மஹ்தி தலைமையில் நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
பேருந்து சேவை தொடரும்..
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண தனியார் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அதன் உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர், நகர சபையின் பிரதி தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர் ராபி , பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களின் செயலாளர் ரைஸ்டீன், கிண்ணியா போக்குவரத்து போலீஸ் பொறுப்பதிகாரி முஸம்மில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதி நிதி, வீதி அபிவருத்தி திணைக்கள பிரதி நிதி, தனியார் பஸ் உரிமையாளர்கள், கிண்ணியா இ.போ.ச நிலையப் பொறுப்பதிகாரி, சமூக நிறுவன தலைவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தொடர்ந்து எதிர்வரும் 06.04.202ஆம் திகதியில் இருந்து தீர்மானிக்கப் பட்ட புதிய பாதை மார்க்கத்தில் பேருந்து பயணத்தை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலன் கருதி குறித்த பொது போக்குவரத்து சேவை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பயணிகள் பெரும் நன்மையடைவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..