வடிசாராயம் உற்பத்தி செய்த ஒருவர் கைது; நால்வர் தப்பியோட்டம்
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வடிசாராயம் காய்ச்சிய உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகை இட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 32 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், நால்வர் தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வடிசாராயம் உற்பத்தி செய்வதாக கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் படி உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதாகவும் கோடாத்திரவம் 4 பரல்களும், 3 வடிசாராய களங்கள், 135 போத்தல் வடிசாரயமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 18 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan