மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சீனா வலியுறுத்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் நடத்தப்பட்டு வரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா அண்மையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளது.
கருணா குழுவின் முக்கியஸ்தர் படுகொலை - ஒட்டுமொத்த தமிழர்களை காக்க அந்தவொரு இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
போர்நிறுத்தம்
இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களின் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான ஆலோசனைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இப்பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த பிற நாடுகள் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகளுக்கு மதிப்பளித்து, கூடிய விரைவில் ஒரு விரிவான மற்றும் நிலையான போர்நிறுத்தத்தை எட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரொய்ட்டர்ஸ் மற்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனங்களின்படி, மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் சீனா இந்த சந்திப்பில் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளது.
பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம்
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri