கனடா கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி
போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் ஏற முயன்றதாக கூறப்படும் இலங்கையர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில், லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக குறித்த இலங்கையர் அங்கு சென்றுள்ளார்.
பயண ஆவணத்தில் முறைகேடு
அவர் சமர்ப்பித்த கனடா நாட்டு பயண ஆவணத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் நடத்திய மேலதிக விசாரணையில், குறித்த நபர் இலங்கையர் எனவும், சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக பல பயணப் பாதைகளைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.