திருகோணமலையில் 67 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (27) செவ்வாய்க்கிழமை மாத்திரம் 67 கோவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 31 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
திருகோணமலையைச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உட்பட்ட பகுதியில் 27 தொற்றாளர்களும், கிண்ணியா பிரதேசத்தில் 5 நோயாளர்களும், குறிஞ்சான்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், தம்பலகாமத்தில் ஒருவரும், கந்தளாயில் இருவரும் இனங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட எத்தாபெந்திவெவ, மொரவெவ பகுதிகளில் 11 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், மொரவெவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை
தனிமைப்படுத்தியுள்ளதாகவும், தொடர்ச்சியாகத் திருகோணமலை மாவட்டத்தில் பரிசோதனைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சமூக
இடைவெளிகளைப் பேணுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
டி.ஜீ.எம்.கொஸ்தா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri