திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 83 தொற்றாளர்கள்
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 83 தொற்றார்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன்,இதுவரை 16 மரணங்கள் சம்பவித்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் இன்று (06) காலை 10 மணி தொடக்கம் 4 மணி வரை 11 தொற்றாளர்கள் இனங்கணப்பட்டுள்ளதுடன், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 பேரும், சேருவில சுகாதார வைத்திய பிரிவில் இருவரும், தம்பலகாமம் பகுதியில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இன்று (06) 7.30 மணியளவில் கோவிட் பற்றிய விபரங்களை கேட்டறிந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 1720 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை 279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 16 மரணங்களும்,திருகோணமலை சுகாதார வைத்திய பணிமனைகுட்பட்ட பகுதியில் ஆறு பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேரும்,மூதூர் பிரதேசத்தில் இருவரும், கந்தளாயில் இருவரும், கிண்ணியாவில் ஒருவரும் இன்று வரை கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளிகளை பேணி சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தேவையற்ற விதத்தில் வெளியிடங்களுக்குச் செல்லாமல் தங்களுடைய வீடுகளில் இருக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam