போலந்தில் கிரெம்ளினை விமர்சித்து வந்த ரஷ்யக் கலைஞர் சுட்டுக்கொலை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தீவிரமாக விமர்சித்து வந்த ரஷ்யக் கலைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலந்து அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.6.2026) போலந்தின் கிழக்கு நகரான பியாலா போட்லாஸ்காவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பெலாரஸ் நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
படுகொலை
கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், ரஷ்ய தினமான ஜூன் 12 அன்று, இவர் பெர்லினுக்குச் சென்று ஜோசப் ஸ்டாலின் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோரைச் சித்திரவாதை செய்வது போன்ற ஒரு நையாண்டி ஓவியத்தை ஏந்திப் போராட்டம் நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்கு இராணுவ மற்றும் இதர உதவிகளை வழங்கும் முக்கிய மையமாக விளங்குவதால், போலந்து நாடு ரஷ்ய உளவாளிகளின் இலக்காகவும், நாசவேலைகளுக்கான களமாகவும் மாறி வருவதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.
இந்த படுகொலை சம்பவம் குறித்து போலந்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை, பொலிஸார் மற்றும் வழக்கறிஞர்களுடன் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகிறது.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri