ராஜபக்ச குடும்பத்திற்குள் ஊடுறுவியுள்ள புதிய நோய்! கடும் மன அழுத்தத்தால் திக்கித் திணறும் நிலை
ராஜபக்ச குடும்பத்தில் இன்று பலர், உணவில் கவனம் செலுத்த முடியாமல், சரியாக உறங்க முடியாமல், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நமது நாட்டில் பணத்தைக் கொள்ளையடித்து, இலஞ்சம் பெற்றுக்கொண்டு தப்பித்தவர்கள், பாதாள உலகத்தினரிடம் இருந்தும் இலஞ்சம் பெற்றவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பலர் நாட்டை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.
அதிகரித்துள்ள நோய்
இதில் பாரதூரமான விடயங்கள் அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. எனவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை உரிய அலுவலகங்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்தில் இருந்து தப்புவதற்காக பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி, மறைந்திருந்த அனைவரும் தற்போது அடுத்தடுத்து சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதனால், அது நாமல் ராஜபக்சவாக இருந்தாலும் சரி, வேறு எந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி, விக்ரமசிங்கவாக இருந்தாலும் அது சட்டத்திற்கு முக்கியமல்ல. சட்டம் அனைவருக்குமே சமமானதுதான்.
ராஜபக்ச குடும்பத்தைப் பொறுத்தவரையில், ஒருவருக்கேனும் வழக்குகள் இல்லாமல் இல்லை. டேசி ஆச்சி முதல், ஷிரந்தி ராஜபக்சவின் மைத்துனன் மற்றும் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் ஆகியோர் வரை வழக்குகள் உள்ளன. இப்படி முழு குடும்பத்திற்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன.
இப்படியான நிலையில், அவர்கள் சிங்கப்பூர் அல்ல, அமெரிக்காவுக்கும் சென்று சிகிச்சைப் பெற வேண்டிய நிலை ஏற்படுமா என்று எமக்கு சொல்ல முடியாது.

எது எப்படியிருப்பினும் இன்று, வழக்குகள் தொடரப்பட்டு, சந்தேகத்தின் பேரில் அல்லது பிணையில் வெளியில் இருக்கும் பலருக்கு தற்போது உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம்.
அவர்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லை. அவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.
அந்த மன அழுத்தத்தின் காரணமாக, அவர்கள் சில நேரங்களில் பொதுவெளிகளில் உளறுகின்றனர். அதனைத் தான் நாங்கள் இப்போது ஊடங்களில் காண்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்