சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து..

Sri Lanka Bomb Blast Vasudeva Nanayakkara Easter Attack Sri Lanka Suresh Salley
By Benat Jun 16, 2026 10:45 AM GMT
Report

தான் முன்னெடுத்த புலனாய்வு விசாரணைகள் மற்றும் சேகரித்த இரகசியத் தகவல்கள் அனைத்தையும் சுரேஷ் சலே தனது கணினியில் சேமித்து வைத்திருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கணினிக்கான கடவுச்சொல்லை வழங்கினால் தற்போதைய விசாரணை அதிகாரிகள் அந்த தகவல்களைக் கைப்பற்றி தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் சுரேஷ் சலேவுக்கு இருக்கலாம் என்றும் வாசுதேவ சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

என்னை கைது செய்யாதீர்...! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

என்னை கைது செய்யாதீர்...! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

கோட்டாபயவுக்காக நடத்தப்பட்ட தாக்குதல்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகள், தற்போதைய அரசியல் சூழலில் தேவையற்ற ஒரு குழப்பத்தையே தோற்றுவித்துள்ளது.

இந்தமுழு விவகாரமும் தற்போதைய நிலையில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான ஊடகங்கள் அனைத்தும் இதையே முதன்மைப் படுத்திச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சலே தொடர்பில் நாட்டில் இருவேறு அரசியல் கருத்துக்கள் மோதிக்கொள்வதை நாம் காண்கின்றோம்.

சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து.. | Secrets Inside Suresh Saley S Computer

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்காகவே சுரேஷ் சலேயின் வழிநடத்தலில் உயிர்த்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபுறத்தில், கோட்டாபய ராஜபக்சவை இவ்விவகாரத்தில் சிக்க வைப்பதற்காகவே சலே கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

இவ்வாறு இருவேறு அரசியல் தரப்புகள் மோதிக்கொள்வதால் தேவையற்ற குழப்பநிலையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை ஒரு சாதாரண விசாரணைப் போக்கில் கொண்டு செல்ல அனுமதித்திருக்க வேண்டும்.

அசலேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அங்கு அவர் வழங்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றம் அடுத்தகட்டத் தீர்மானத்தை எடுத்திருக்க முடியும். அதனை விடுத்து, தற்போது சகல தரப்பினரும் பிரிந்து நின்று, முழுப் பிரச்சினையையும் ஒரு அரசியல் பகையாகவும் மோதலாகவும் மாற்றியுள்ளனர்.

சுரேஷ் சலே என்பவர் நாட்டின் ஒரு முக்கிய இராணுவ அதிகாரி என்பதை நாம் அறிவோம். கடந்த காலங்களில் எத்தனையோ முக்கிய இராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், தண்டனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

அவ்வாறிருக்கையில், இந்த விவகாரத்தை மாத்திரம் ஏன் இவ்வளவு பெரிய அரசியல் விவாதமாக மாற்ற வேண்டும்? இருதரப்பிலும் முன்னெடுக்கப்படும் விவாதங்கள் காரணமாகவே இந்த முழுப் பிரச்சினைக்கும் தேவையற்ற அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.

உயிருடன் இருக்க வேண்டிய சுரேஷ் சலே

எந்தவொரு அரசாங்கமும் தமக்கு நம்பிக்கையற்றவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதில்லை. எனவே, இந்த அரசாங்கத்தின் கீழ் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் பதவிகளைப் பெற்றுக்கொண்டமை குறித்து குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை.

இதேவேளை, சலே தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணைகளின் போதோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படும் போதோ, கைதிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது இன்று நேற்று நடக்கும் ஒரு விடயமல்ல. அது கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது.

சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து.. | Secrets Inside Suresh Saley S Computer

அத்தகைய அத்துமீறல்கள் அல்லது துன்புறுத்தல்களை எவரும் அங்கீகரிக்க முடியாது. அது குறித்து நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க முடியும், எடுக்கவும் வேண்டும். தடுப்புக் காவலில் இருக்கும் போது சலேவுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அவமானங்கள் மற்றும் கசப்பான அனுபவங்கள் குறித்து, விசாரணை செய்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே உள்ளன.

ஆனால், அதற்கு அவர் முதலில் உயிருடன் இருக்க வேண்டும். எனவே, சலே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

போராட்டத்தை நிறுத்தி, மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று, உடல் ரீதியாகத் தேறி, தனக்குள்ள அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கை முன்னோக்கி நகர்த்த வேண்டும்.

விசாரணைகளின் போது, சலேயின் கணினிக்கான கடவுச்சொல்லை அதிகாரிகள் கோரியுள்ளதாக அறிய முடிகிறது. கணினியின் கடவுச்சொல்லை வழங்க முடியாது எனின் அதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டும். தான் முன்னெடுத்த புலனாய்வு விசாரணைகள் மற்றும் சேகரித்த இரகசியத் தகவல்கள் அனைத்தும் அந்தக் கணினியிலேயே இருப்பதாக அவர் கூறக்கூடும்.

ஒருவேளை கடவுச்சொல்லை வழங்கினால், அதிலுள்ள அனைத்துத் தகவல்களையும் அதிகாரிகள் கைப்பற்றி, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாம்.

இதனால் கடவுச்சொல்லைத் தன்னால் வழங்க முடியாது என்றும், தமக்குத் தேவையான முறையில் கணினியைப் பரிசோதித்துக் கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் சுரேஷ் சலே  அதிகாரிகளிடத்தில் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். 

உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நீதிமன்றத்தில் முன்னிலையான யோஷித ராஜபக்ச - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நீதிமன்றத்தில் முன்னிலையான யோஷித ராஜபக்ச - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US