திருகோணமலை தமிழரசுக்கட்சியின் மேயர் குழப்பம்! சுமந்திரன் இரகசியமாக எழுதிய பெயர்
திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு முன்னாள் தலைவராக இருந்தவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மீண்டும் மேயராக நியமிப்பது பிழையென கனடாவில் வசிக்கும் சுவாமி சங்கரானந்தா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு முன்னாள் தலைவராக இருந்தவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மறுபடியும் அவர் மேயராக வருவதற்கு போட்டியிடுகின்றார்.
இதேவேளை, சமூகசெயற்பாட்டாளர் ஒருவரும் இந்த பதவிக்காக போட்டியிடுகின்றார்.
குறித்த சமூகசெயற்பாட்டாளர் அஜித்தை போட்டியிலிருந்து விலகுமாறும் தமிழரசுகட்சியில் நீண்டகாலமாக இருக்கும் முன்னாள் மேயரை தற்போதும் மேயராக வரட்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு...

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
