திருகோணமலை தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த பிள்ளையானின் பின்னணி வேட்பாளர்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தமிழர் அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கிய எதிர்கால அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளன. அடுத்து வரும் தேர்தல்களில் மக்களுடைய பிரச்சனைகளை மையப்படுத்தி, மக்களின் எதிர்பார்க்கைகளை முன்னிறுத்தி கையாளும் தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக இந்த முடிவுகள் பார்க்கப்படுகின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகின்றபோது உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சியை வெற்றியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவாத போக்கின் உண்மைகளை ஆராய்ந்தால், தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை முற்றிலும் புறந்தள்ளவில்லை.
கட்சிகள் தமக்குள்ளே ஏற்பட்ட போட்டியும் பிரிவினைக்கு மக்கள் கற்பித்த பாடமாக இது காணப்பட்டது. இந்த பின்னணியில் தற்போது உள்ளூராட்சி மன்ற ஆட்சியை வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து அமைப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக ஆட்சியமைப்பதற்காக நடத்தப்பட்டடுள்ள பேச்சுவார்த்தைகள் மற்றும் அவற்றில் கூட்டு சேரும் அங்கத்துவ கட்சிகள் தொடர்பில் சில வாதபிரதிவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த விடயம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனடாவில் வசிக்கும் சுவாமி சங்கரானந்தா கூறிய பல விடயங்கள் உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் நிலைபாடுகள் தொடர்பில் விளக்கப்படுத்தியிருந்தது.
குறிப்பாக திருகோணமலையில் தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த பிள்ளையானின் பின்னணி வேட்பாளர் குறித்த தகவலும் அவரால் பின்வரும் காணொளியில் முன்வைக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
