கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகள்..! முக்கிய தலைமைகளை குறிவைக்கும் அரசாங்கம்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பெயர் அடங்கிய பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின்(NFF) தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள குறித்த பட்டியலில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கங்களின் அரசியல்வாதிகளின் பெயர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அத்துடன், இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இயக்குநர் அடிக்கடி ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குறித்த பட்டியல் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தயாரிக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீட்டுவசதி மற்றும் கட்டுமான அமைச்சராக பணியாற்றிய போது நடந்த ஒரு விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு தான் அழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
