வடக்கு மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி தொடர்பான முடிவை மாற்றிய அநுர அரசு
வட மாகாணத்தில் காணித் தீர்வு தொடர்பாக, 2025, மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
முன்னதாக, வட மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள காணி உரிமை தீர்வுத் திணைக்களைத்தால், வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
குற்றச்சாட்டுக்கள்
எனினும் அரசாங்கம், வடக்கில் மக்களின் காணிகளை, அரசாங்கம் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், வடக்கின் அரசியல்வாதிகளும், இந்த வர்த்தமானிக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.
கடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தனிநபர் பிரேரணை ஒன்றினை முன்வைத்து இது குறித்து உரையாற்றியிருந்தார்.
இதனையடுத்து பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் லால்காந்த உள்ளிட்டோர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அந்த வர்த்தமானியை மீளப்பெறுமாறு கடும் அழுத்தம் கொடுத்ததோடு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.
இந்த அழுத்தங்களின் பின்னரே குறித்த வர்த்தமானி மீளப்பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால், இது தொடர்பில் காணி உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கூட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
