விமான நிலையத்தில் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி : வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்
இந்தியாவில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரும், திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் கந்தசாமி, நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னர் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அன்றையதினம் மாலை 5.45 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகுமாரோடு எவ்வித தொடர்பையும் மேற்கொள்ள முடியாத சூழலில், இந்த விவகாரம் அவர் கடத்தப்பட்டு இருப்பது போன்ற விம்பத்தை வெளி உலகிற்கு காட்டுவதாக சமூக ஆர்வலர் ரஜீவ் காந்த் தெரிவித்துள்ளார்.
ஜபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து காலங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நீதிமன்றத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்களால் பரபரப்பு - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!