நீதிமன்றத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்களால் பரபரப்பு..!
புதிய இணைப்பு
திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் தன்னுடைய கழுத்தை தானே அறுத்துக் கொண்டதையடுத்து, அருகில் இருந்த சந்தேக நபர் ஒருவரின் கழுத்தையும் அறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.
அதன் பின்னர், படுகாயமடைந்த சந்தேக நபரின் கையில் இருந்த கூர்மையான அயுதத்தை (பிளைட்) வாங்கிய மற்றுமொரு சந்தேக நபர் அவருடைய கழுத்தை அறுப்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.
இதன்போது, அங்கிருந்த பொலிஸார் இருவரையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரில் ஒருவர், மோசமான நிலையில் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரொருவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் இன்று(28) நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகத் தெரிவித்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவர், 48 மணித்தியால விசாரணைகளின் பின்னர் இன்று திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களுள் ஒருவரே நீதிமன்றத்திற்குள் வைத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

பொலிஸார் தமக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாக தெரிவித்து குறித்த சந்தேகநபர் கவலையடைந்த நிலையிலேயே நீதிமன்றத்தில் சந்தேக நபர் கழுத்தை அறுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
You may like this..
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam