ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்: புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள்

Tamil nadu Narendra Modi India trichy
By Dharu Jan 02, 2024 07:49 PM GMT
Report

இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தின் புதிய வடிவமைப்பானது இந்து மதத்தின் பிரதிபலிப்பை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 951 கோடி இந்திய மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் முனையமானது இன்றைய தினம் (02) இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த ஐந்து புதிய நாடுகள்: புடின் வெளியிட்டுள்ள திட்டம்

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த ஐந்து புதிய நாடுகள்: புடின் வெளியிட்டுள்ள திட்டம்

இந்து ஆலய வடிவமைப்பு 

இதில், ஒரே நேரத்தில் 4,000 சர்வ தேச பயணிகள் மற்றும் 1,500 உள்நாட்டு பயணிகளின் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என கூறப்படுகிறது.

ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்: புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள் | Trichy Airport New Terminal

இந்த புதிய பயணிகள் முனையத்தின் சிறப்பாக இந்தியாவின் தமிழ் கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பார்ப்போர் கண்களை கவரும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்செல்லும் வெளியேறும் வாயில்களிலும் இந்து ஆலய கோபுர முகப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்: புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள் | Trichy Airport New Terminal

உள்ளே சுவரில் நடராஜர் சிற்பங்கள் , இந்து கடவுள்களின் படங்களும் வரையப்பட்டுள்ளதுடன் பிரமான்ட திரையில் ஆலய தேர் கலாசார நடனங்களும் உள்ளன.

பொட்டம்மானை கேட்ட இந்தியாவும், ஹமாஸைக் கேட்ட இஸ்ரேலும் (Video)

பொட்டம்மானை கேட்ட இந்தியாவும், ஹமாஸைக் கேட்ட இஸ்ரேலும் (Video)

அதிநவீன வசதி

இதேபோல, வருகை, புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்: புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள் | Trichy Airport New Terminal

புதிய முனையத்தின் உள்ளே புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 பரிசோதனை மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் மேம்பாலங்கள், 3 இடங்களில் முக்கியஸ்தர்களின் காத்திருப்பு அறைகள்,1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்: புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள் | Trichy Airport New Terminal

இந்த முனையத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமானநிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

காசாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 207 பேர் பலி

காசாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 207 பேர் பலி

களம் காணத் துடிக்கும் படைப்பாளர்களுக்கு லங்காசிறி வழங்கும் மகத்தான வாய்ப்பு!

களம் காணத் துடிக்கும் படைப்பாளர்களுக்கு லங்காசிறி வழங்கும் மகத்தான வாய்ப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US