களம் காணத் துடிக்கும் படைப்பாளர்களுக்கு லங்காசிறி வழங்கும் மகத்தான வாய்ப்பு!
உலகத் தமிழர்களின் உறவுப் பாலமாக மிளிரும் லங்காசிறி ஊடகம், மற்றுமொரு அரிய வாய்ப்பை படைப்பாளர்களுக்கு வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களில் ஏராளமான படைப்பாளர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். இலங்கையிலும் பல புதிய படைப்பாளர்களும், படைப்பாக்கத்தில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளும் தமக்கான ஓர் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியை லங்காசிறி ஊடகம் கையிலெடுத்திருக்கிறது.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில், சமூக அக்கறையுள்ள பதிவுகளையும், கட்டுரைகளையும், ஆக்கங்களையும் வெளியிடும் அன்பர்களும் தங்கள் பதிவுகளை லங்காசிறி ஊடகத்தின் வாயிலாக வெளியிட்டு தங்களுக்கான அங்கிகாரத்தை பெறுவதுடன், அதன் மூலமாக தங்களுக்கான வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் எனபதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
அதேபோன்று, அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் உங்களுடைய பிரதேசம் சார்ந்த பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வர முடியும்.
கல்வி மற்றும் சமூக நிகழ்வுகள் உள்ளிட்டவற்றையும் பதிவிட்டு வருமானத்தை ஈட்டுவதுடன், உங்கள் ஊர் பிரச்சினைகளையும் வெளியே கொண்டுவர முடியும்.
நகரத்திலிருந்து சிறு கிராமம் வரை நாட்டின் எப்பகுதியிலிருந்தாலும், அவற்றை முழுமையான தகவல்களுடன் வெளியிடுவதன் வாயிலாக அனைத்தையும் உலகறிச் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது லங்காசிறி ஊடகம்.
ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக ஊடக படைப்பாளர்கள், படைப்பாக்கத்தில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எதிர் காலத்தில் ஊடகத்தில் இணைந்து பணியாற்ற இருக்கும் இளைஞர் யுவதிகள் உங்கள் சொந்தப் பெயரில் உங்களின் ஆக்கங்களை வெளியிட முடியும் என்பதோடு, புனை பெயரிலும் வெளியிட முடியும். அதுமாத்திரமல்லாது, உங்களின் முகநூல் பக்கத்தின் பெயரையும் குறிப்பிடலாம்.
அதேபோன்று உங்கள் கிராமத்தின் பெயரில் நீங்கள் நடத்தும் இணையத்தளங்களின் பெயரிலும் ஆக்கங்களை பதிவுகளை வெளியிட முடியும்.
குறிப்பாக எதிர்காலத்தில் நீங்கள் தனியாக ஊடகத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப படியாக வழிகாட்டிய இந்த முயற்சி உங்களை ஊக்கப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஆர்வமுள்ள அன்பர்கள், படைப்பாளர்கள் இளைஞர் யுவதிகள், https://publisher.lankasri.com/ இந்த இணைப்பினூடாக உங்கள் விபரங்களை பதிவு செய்து உங்களுக்கான களத்தை உருவாக்கிக் கொள்ள முந்திக் கொள்ளுங்கள்.
தற்போது இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து மட்டுமே இணைந்துகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம். எதிர்காலத்தில் அனைத்து நாடுகளிலிருந்தும் இணைந்துகொள்ள முடியும் என்பதையும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
