கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளைஞர்: பேண்டு வாத்தியம் முழங்க நடைபெற்ற இறுதி அஞ்சலி
கனடாவில்(Canada) பாதுகாவலராக பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞரொருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சக பாதுகாவலர்கள் அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க இறுதி மரியாதை செலுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றையதினம்(15) கனடாவில் இடம்பெற்றுள்ளது.
கனடாவில் (Canada), இந்தியா (India) - பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞரொருவர் கடந்த 6ஆம் திகதி கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இருவர் கைது
குறித்த சம்பவம் பதிவாகியுள்ள சிசிரிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் பெயர் ஹர்ஷன்தீப் சிங் (Harshandeep Singh) என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிங் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டனில் பாதுகாவலராக பணிக்கு சேர்ந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், இந்த இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்.
அவரைக் கொலை செய்ததாக Evan Chase Rain, (30) மற்றும் Judith Saulteaux (30) என்னும் சந்தேகநபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதி மரியாதை
இந்நிலையில், கொல்லப்பட்ட ஹர்ஷன்தீப் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், சிங்குக்கு கௌரவம் செலுத்தும் வகையில், அவரது சக பாதுகாவலர்களும், அவசர உதவிக்குழுவினரும் இணைந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்கள்.
250க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், பேண்டு வாத்தியம் முழங்க சிங்குக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டதைக் காட்டும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
