ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள்: 45 ஆயிரத்தை தாண்டும் பலியானோர் எண்ணிக்கை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே 14 மாதங்களாக நடந்து வரும் போரில் காசா பகுதியில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் குண்டு வீச்சுக்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை எனினும் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று பாலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவம்
மறுதரப்பில் இஸ்ரேலிய இராணுவம், தாம் இதுவரை 17,000க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக கூறியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து 45,028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 106,962 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் அல்லது மருத்துவர்கள் அணுக முடியாத பகுதிகளில் புதைந்திருப்பதால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில், இரண்டு பெற்றோர்கள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் உட்பட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து 10 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர் என்று சுகாதார அமைச்சகத்தின் அவசர சேவை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைமையிலான போராளிகள்
ஹமாஸ் தலைமையிலான போராளிகள், 2023 ஒக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலுக்குள் புகுந்து சுமார் 1,200 பேரைக் கொன்று, சுமார் 100 பேரை பணயக்கைதிகளாக தடுத்து வைத்ததன் பின்னரே, அவர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ஆரம்பித்தது.
எனினும் அவர் தடுத்து வைத்திருந்த பணயக்கைதிகளில், குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |