பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனுக்கு நான்காவது நாள் அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் பருத்தித்துறை நினைவுத் தூபியில் இன்று (18.09.2026) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அஞ்சலி நிகழ்வு
இதில் யாழ். மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆம்பித்து வைத்திருந்தார்.

பருத்தித்துறை நகர பிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் மலரஞ்சலி செலுத்தி மலர அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.





மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்