அச்சுறுத்தலின் மத்தியில் தியாக தீபம் திலீபனுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி
முல்லைத்தீவில் பிரத்தியேக இடத்தில் தியாக தீபம் திலீபனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் இன்றைய தினம் காலை 11 மணியளவில் மலர் தூவி பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கையில் இந்திய இராணுவ தலையீட்டின் போது, 5 அம்ச உண்ணாவிரத கோரிக்கையை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நீராகாரமும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபன், செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.
இன்றையதினம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்படலாம் என்ற காரணத்தால் பீற்றர் இளஞ்செழியனது வீட்டைச் சுற்றி புலனாய்வளர்கள், இராணுவத்தினர், பொலிஸார் காலையிலிருந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 7 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
