இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் அண்மையில் நடத்திய ஆய்வில், இலங்கையில் ஜனநாயக ஆட்சிமுறை தொடர்பான போக்குகள் மாற்றமடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய கணக்கெடுப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 25 மாவட்டங்களில் 1,350 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் ஜனநாயக ஆட்சி
ஆய்வின்படி, ஏறத்தாழ 10 இலங்கையர்களில் ஒருவர் எதேச்சதிகார ஆட்சிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார், இது 2018 இல் இருந்ததை விட எதேச்சதிகாரத்துக்கான விருப்பத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ஆட்சியை ஆதரிக்கின்றனர் எனினும் சில சூழ்நிலைகளில், ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகார ஆட்சியே அவர்களுக்கு விரும்பத்தக்கதாக அமைந்துள்ள கவலைக்குரிய உணர்வை இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.
இந்தநிலையில் 2018 இல் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் போது ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன் சர்வாதிகாரத்திற்கு ஆதரவான போக்கு அதிகரித்துள்ளதாக மாற்றுக்கொள்கைளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக ஆட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாகவே எதேச்சதிகார ஆட்சியைத் தழுவுவதற்கான வாய்ப்பை இந்த போக்கு அறிவுறுத்துகிறது.
அத்துடன், நாடாளுமன்ற நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்கள் நம்பிக்கையில் கூர்மையான சரிவை இந்த கணக்கெடுப்பு அம்பலப்படுத்தியுள்ளதாக மாற்றுக்கொள்கைளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
