செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலின் கப்பல்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேலுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலையும் செங்கடலின் ஊடாக பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஹவுதி ஏவுகணைத் தாக்குதலினால் ஏமன் கடற்கரையில் வணிகக் கப்பலை சேதப்படுத்தியதாக கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தாக்குதலின்போது விபத்து ஏதும் ஏற்படாததால் வணிகக் கப்பலின் பணியாளர்கள் தொடர்ந்து பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பணியாளர்கள் உயிரிழப்பு
இதேவேளை எதிர்காலத்தில் தமது தாக்குதல்களை விரிவுபடுத்துவோம் எனவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மையில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலால் ஏடன் கடலில் வணிகக் கப்பல் தீப்பிடித்து, மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன் மற்ற குழுவினர் கப்பலை விட்டுவிட்டு தப்பித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
