கனடாவில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் - பொலிஸாரின் அறிவித்தலால் சர்ச்சை
கனடா - டொராண்டோ நகரில் கார் திருட்டு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புள்ளிவிபரங்களின் படி கடந்த ஆண்டுகளை விட 2023ம் ஆண்டில் டொராண்டோ பகுதியில் கார் திருட்டுகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,
பொதுமக்களிடையே அதிர்ச்சி
காரை திருடும் திருடர்கள் வீடுகளில் புகுந்து பொருட்களை திருடிச் செல்வது கடந்த ஆண்டுகளை விட 400% அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடர்கள் கார் சாவியை தேடுவதற்காக உரிமையாளர்களின் வீட்டிற்குள் நுழைகின்ற போது வீட்டின் பொருள்களையும் சேர்த்து திருடி செல்கின்றனர்.
எனவே கார் சாவியை காரிலோ அல்லது வீட்டின் முகப்பிலோ உரிமையாளர்கள் வைத்து விட்டால், கார் திருட வருபவர்கள் வீட்டினுள் நுழைந்து திருடுவது தடுக்கப்படும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸாரின் குறித்த அறிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக ஊடக தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
