டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரட்டை பிரஜாவுரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு
அத்துடன், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான காரணிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே டயானா கமகேவிற்கு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றம் விதித்துள்ள இந்த தடையுத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தொலைநகல் மூலம் அறிவிக்குமாறு நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ளவர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
