ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் நிதியாளர்கள் இருவருக்கு பிரித்தானியாவின் பயணத் தடை
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் நிதியாளர்கள் இருவருக்கு பிரித்தானிய அரசு பயணத் தடை விதித்துள்ளது.
முஸ்தபா அயாஷ் மற்றும் சந்தேகத்திற்குரிய ஹிஸ்புல்லா நிதியாளர் நசீம் அகமது ஆகிய இவருக்கே பயணத் தடை விதித்துள்ளதாக பிரித்ததானிய அரசாங்கம் கூறியுள்ளது.
முன்னதாக, பயங்கரவாதத்தை வளர்ப்பதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கு நிதியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த இருவருக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோதமான செயற்பாடு
இப்போது, விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையின் கீழ் இருவரும் பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது.
பயங்கரவாத நிதியுதவி அச்சுறுத்தல்களில் இருந்து பிரித்தானிய பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமையும் என பிரித்தானிய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பு அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவது சட்டவிரோதமான செயற்பாடு ஆகும்.
பொருளாதாரத் தடை
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் நசீம் அகமது மீது 2019ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.
அதனையடுத்து, பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிக் குழுவுடன் இணைக்கப்பட்ட ஊடக வலையமைப்பிற்கு நிதியளித்து ஆதரித்ததற்காக அயாஷ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |