ஜெப்ரி எப்ஸ்டீனின் மரணம் தொடர்பில் முக்கிய ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்க நீதித்துறை
சர்ச்சைக்குரிய அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீனின் மரணம் தொடர்பான புதிய புகைப்படங்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு சிறையில் எப்ஸ்டீன் உயிரிழந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில் பல முக்கிய ஆதாரங்கள் இந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நீதி
எப்ஸ்டீன் உயிரிழந்த பிறகு அவரை மருத்துவ உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துச் செல்லும் மற்றும் சிகிச்சையளிக்கும் 20க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இதில் அடங்கும்.
எப்ஸ்டீனின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அவரது பிரேதப் பரிசோதனை விபரங்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எப்ஸ்டீனின் கழுத்துப் பகுதியில் உள்ள குருத்தெலும்புகளில் இரண்டு முறிவுகள் ஏற்பட்டிருந்ததை எக்ஸ்-ரே ஸ்கேன் புகைப்படங்கள் காட்டுகின்றன. எப்ஸ்டீன் இறப்பதற்கு முந்தைய இரவு, சிறைக் காவலர்கள் 3:00 மணி மற்றும் 5:00 மணிக்கு மேற்கொள்ள வேண்டிய வழக்கமான சோதனைகளைச் செய்யவில்லை என்பதும், அந்த நேரத்தில் சிறையின் கெமராக்கள் செயல்படவில்லை என்பதும் இந்த ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சிக்குப் பிறகு எப்ஸ்டீனைச் சந்தித்த உளவியல் நிபுணரின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில், "எனக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இல்லை, மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புகிறேன்" என்று எப்ஸ்டீன் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, அவரோடு நெருக்கமான தொடர்பில் இருந்த பிரித்தானியாவின் ஆண்ட்ரூ இளவரசர் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வரும் நிலையில், இந்த விரிவான ஆவணங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri