கிழக்கு மாகாண அதிகாரிகள் 6 பேருக்கு ஒரே நாளில் இடமாற்றம் - ஆளுநர் அதிரடி
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கமைய மாகாணத்தில் நீண்ட காலமாக ஒரே பதவியில் கடமையாற்றிய சில திணைக்களத் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததாலும், அந்த பதவிகள் தொடர்பான தகுதிகளை பூர்த்தி செய்யாததாலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில்கொண்டு, மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க அவர்களிற்கு ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்.
புதிய நியமனங்கள்
அதற்கமைய, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய ஆர்.வளர்மதி மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய என்.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் காப்புறுதி சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றிய எஸ்.சரணியா மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண கூட்டுறவுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றிய ஏ.ஜி. தேவேந்திரன்மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய கே.இளந்துருதன் மாகாண கூட்டுறவு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க தலைமையில் வழங்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இன்று (02) காலை
திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து
விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri
